ஜொகூர் பத்து பஹாட்டில் பேரங்காடியின் கழிவறையில் பெண்ணை மறைந்திருந்து எட்டிப் பார்த்த உள்ளூர் ஆடவன் கைதாகியுள்ளான்.
Jalan Flora Utama-வில் உள்ள பேரங்காடியில் வியாழக்கிழமை மதியம் அச்சம்பவம் நிகழ்ந்தது.
பக்கத்து பக்கத்து கழிவறையின் தடுப்புச் சுவரின் கீழ்ப்பகுதியில் குனிந்தவாறு அவ்வாடன் எட்டிப் பார்ப்பதைக் கண்டு பதறிப் போன 28 வயது அப்பெண், உதவிக் கோரி கத்திக் கூச்சலிட்டுள்ளார்.
அதோடு, உள்ளிருந்தவாறு தண்ணீர் குழாயில் இருந்து அவன் மீது நீரை பீய்ச்சியடித்தார்.
இதனால் ஓட முடியாது கழிவறையினுள்ளே ஒளிந்திருந்தவனை, பணியில் இருந்த பாதுகாவலர் பிடித்து பத்து பஹாட் போலீசிடம் ஒப்படைத்தார்.
24 வயது அவ்விளைஞன் விசாரணைக்காக 4 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளான்.
பெண்கள் கழிவறையில் அத்துமீறி நுழைந்த ஆடவன் பாதுகாவலரிடம் வசமாக சிக்கிக் கொண்ட காட்சிகள்அடங்கிய 58 வினாடி காணொலி முன்னதாக சமூக ஊடகங்களில் வைரலானது.