கோம்பாக், ஜூன் 18 – இம்மாதம் 10 ஆம் தேதி நச்சுணவினால் இரண்டு நபர்கள் மரணம் அடைந்ததது தொடர்பில் போலீஸ் மேற்கொண்டுவரும் விசாரணைக்கு உதவ உணவு விநியோகிப்பாளர் உட்பட இதுவரை 15 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர், ஏற்பாட்டுக் குழு உறுப்பினர்கள், பள்ளி முதல்வர் மற்றும் விநியோகிக்கப்பட்ட உணவு தயாரிப்பாளர்களிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக கோம்பாக் மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் Noor Ariffin Mohamad Nasir வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருக்கிறார். நச்சு உணவு விவகாரத்தில் பாதிக்கப்பட்ட இதர நபர்களிடம் இன்று வாக்குமூலம் பதிவு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.
கோம்பாக் மாவட்ட நிலையில் நடைபெற்ற Program kemahiran Amal Islami என்ற நிகழ்ச்சியில் பசியாறை உட்கொண்ட 247 பேரில் 82 பேர் நச்சுணவினால் பாதிக்கப்பட்டதாக இதற்கு முன் சிலாங்கூர் மாநில சுகாதாரத்துறை தெரிவித்திருந்தது.
bihun goreng மற்றும் telur mata பொரியலின் வர்ணம் மாறியிருந்ததோடு அதன் சுவையும் மாறுபட்டிருந்ததன் காரணமாக நச்சுணவு ஏற்பட்டிருக்கலாம் என சிலாங்கூர் கல்வி இயக்குனர் டாக்டர் உம்மி கல்தோம் சம்சுடின் ( Ummi Kalthom Shamsudin) இதற்கு முன் கூறியிருந்தார்.