கோலாலம்பூர், ஜூன் 27 – புக்கிட் டமன்சராவிலுள்ள வர்த்தகர்களின் ஆடம்பர வீடுகளை உடைத்து கொள்ளையிடும் லத்தின் அமெரிக்கர்களைக் கொண்ட கும்பல் ஒன்றை போலீசார் முறியடித்தனர். கடந்த மே மாதம் 31 ஆம் தேதி போலீசார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் அவர்களிடமிருந்து 7 மில்லியன் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ருஸ்டி முகமட் ஈசா ( Rusdi Mohd Isa ) தெரிவித்திருக்கிறார்.
CCTV கேமராவை செயல் இழக்கம் செய்யும் Jammer கருவியைக் கொண்டு செயல்படும் இந்த கும்பல் கொள்ளையிடும் வீட்டை அடையாளம் கண்டவுடன் வாடகை காரில் சென்று சம்பந்தப்பட்ட வீட்டில் கொள்ளையிட்டு வந்ததாக தெரிகிறது. ஜூன் 6, 9 மற்றும் 14ஆம் தேதிகளில் கோலாலம்பூர் மற்றும் தாய்லாந்தில், பேங்காக்கில் ஏழு தனிப்பட்ட நபர்களை கைது செய்ததன் மூலம் அந்த கொள்ளைக் கும்பலின் நடவடிக்கை முறியடிக்கப்பட்டது.
அந்த சம்பவம் குறித்து அன்றைய இரவு மணி 11.34 அளவில் தங்களது தரப்பு அறிக்கையை பெற்றதாகவும் அவர் கூறினார். தனது வீட்டின் படுக்கை அறையில் பொருட்கள் அலங்கோலமாக காணப்பட்டதை தொடர்ந்து பல்வேறு வகையான 30 ஆடம்பர கைக்கடிகாரங்கள், நகைகள் மற்றும் ரொக்கத் தொகை உட்பட 7 மில்லியன் ரிங்கிட் மதிப்புடைய பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்ததை அந்த வீட்டின் உரிமையாளர் உணர்ந்தார்.
மேலும் அந்த சந்தேகப் பேர்வழிகள் போலி எண்கொண்ட புரோடுவா மைவி காரை பயன்படுத்தியிருப்பது அண்டை வீட்டின் சி.சி.டி.வி மூலம் தெரவிவந்தாக பிரிக்பீல்ட்ஸ் போலீஸ் நிலையத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் ருஸ்டி கூறினார். ஜூம் 6ஆம் தேதி 20 மற்றும் 22 வயது லத்தின் அமெரிக்க இளைஞர்கள் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ஜூன் 9ஆம் தேதி மேலும் நான்கு சந்தேகப் பேர்வழிகள் கைது செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.