கோலாலம்பூர், ஜூலை 4 – நகை பரிவர்த்தனையை தொடர்ந்து 360,966 ரிங்கிட்டை கொள்ளையிட்டதன் தொடர்பில் ஒரு பெண் உட்பட நான்கு வெளிநாட்டினரை போலீசார் கைது செய்தனர்.
பாதிக்கப்பட்ட 45 வயதுடைய பொறியியலானரான ஆடவரை அம்பாங்கில் ஜாலான் சுல்தான் சுலைமான் 1க்கு ஜூன் 24ஆம் தேதியன்று ஆடவன் ஒருவன் காரில் அழைத்துச் சென்றபோது இந்த கொள்ளை சம்பவம் நடந்ததாக சிலாங்கூர் போலீஸ் தலைவர் கமிஷனர் டத்தோ உசேய்ன் ஒமார் கான் ( Datuk Hussein Omar Khan ) தெரிவித்தார்.
மற்றொரு ஆடவன் Jalan sulaiman 1இல் உள்ள தனது அலுவலகத்தில் வர்த்தகத்தை முடித்துக்கொள்ளலாம் என்று கூறியதால் பாதிக்கப்பட்ட நபர் தம்முடன் ஒரு பேக்கில் 360,966 ரிங்கிட்டை எடுத்து வந்துள்ளார்.
குறிப்பிட்ட இடம் வந்தவுடன் பாதிக்கப்பட்ட நபரிடம் காரின் பின் இருக்கையில் அமர்ந்து பணத்தை எண்ணும்படியும் தாம் அருகே அமர்ந்து அதனை கண்காணிப்பதாக சந்தேகப் பேர்வழி கூறியுள்ளான்.
இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட நபர் காரின் பின் இருக்கைக்கு சென்றவுடன் திடீரென பணம் இருந்த பேக்கை எடுத்துக் கொண்டு காரிலிருந்து வெளியேறிய சந்தேகப் பேர்வழி மற்றொரு காரில் தப்பிச் சென்றதாக உசேய்ன் தெரிவித்தார். கார் பூட்டப்பட்டிருந்ததால் பணத்தை இழந்த நபர் உடனடியாக காரிலிருந்து இறங்க முடியவில்லை. அவர் காரின் ஜன்னலை திறந்த பின்னர்தான் வெளியேறி இச்சம்பவம் குறித்து போலீசில் புகார் செய்தார்.
தனை தொடர்ந்து தீவிர விசாரணை நடத்திய போலீசார் கோலாலம்பூர் TRX அருகிலும் , ஜாலான் ரசாக் மென்சனிலும் ஜூன் 28 ஆம் தேதி இரவு மணி 8.40 மணிக்கும் மறுநாள் காலை மணி 11.15க்கிடையே மூன்று வெளிநாட்டு ஆடவர்கள் மற்றும் வெளிநாட்டு பெண் ஒருவரை கைது செய்ததாக கமிஷனர் உசேய்ன் தெரிவித்தார்.
அவர்களிடமிருந்து 28,300 ரிங்கட் ரொக்கம், இரண்டு கார்கள், ஆறு கை தொலைபேசிகள் , ஒரு மடிக் கணினி, ஆறு வங்கிக் கார்டுகளை மற்றும் மூன்று பேக்குகளையும் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகப் பேர்வழிகள் அனைவரும் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர், தங்கம் விற்பதாக வாக்குறுதி தெரிவித்த பின் அதனை வாங்க முயன்றவர்களிடம் பணப் பரிவர்த்தனையின்போது பணத்தை கொள்ளையிடும் நடவடிக்கையில் இக்கும்பல் ஈடுபட்டு வந்ததாக உசேய்ன் தெரிவித்தார்.