சிம்பாங் அம்பாட் , ஜூன் 5 – சுங்கை பாக்காப் தேர்தல் பிரச்சாரத்தில் தீரவமாக ஈடுபட்டு வந்த கெடா மந்திரிபுசார் சனுசி நோர் இன்று கபடி போட்டியில் கலந்துகொண்டார். சிம்பாங் அம்பாட் முத்தியாரா ஜெயா அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் உள்ள மைதானத்தில் இந்த கபடி போட்டி நடைபெற்றது. கெடா மந்திரிபுசர் 7 குழுவுக்கு சனுசி விளையாடினார். சுங்கை பாக்காப் சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலில் இந்திய சமூகத்தின் ஆதரவை திரட்டும் முயற்சிகளில் ஒன்றாக சுங்கை பக்காப் இந்திய இளைஞர் குழுவுடன் இந்த கபடி போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது.
நட்பு முறையிலான இந்த போட்டியில் கெடா இந்தியர் இளைஞர்கள் 29 க்கு 25 என்ற புள்ளிக் கணக்கில் மந்திரி புசார் குழுவை வென்ற போதிலும் நாளை நடைபெறும் இடைத் தேர்தலில் பெரிக்காத்தான் நேசனல் வேட்பாளர் அபிடின் இஸ்மாயில் வெற்றி பெறுவார் என சனுசி நோர் தெரிவித்தார். கபடி விளையாட்டில் மலாக்காரர்கள் ஆர்வத்துடன் பங்கேற்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த விளையாட்டில் தாம் கலந்து கொண்டதாக அவர் கூறினார்.