Latestமலேசியா

எந்தவொரு அச்சமின்றி வாக்களிக்கச் செல்வர் பினாங்கு போலீஸ் தலைவர் வலியுறுத்து

நிபோங் தெபால், ஜூலை 5 – நாளை நடைபெறவிருக்கும் சுங்கை பக்காப் சட்டமன்ற தொகுதியில் பதிவுபெற்ற 39,279 வாக்காளர்களும் எந்தவொரு அச்சமும் கவலையும் இன்றி தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றும்படி பினாங்கு மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹம்சா அகமட் ( Ahmad Hamzah ) கேட்டுக்கொண்டார். வாக்களிப்பு சுமுகமாக நடைபெறுவதற்கு தங்களது தரப்பு அனைத்து முன்னேற்பாடு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார். பொது ஒழுங்கை பராமரிப்பது, சீரான போக்குவரத்து மற்றும் வாக்குச்சாவடி மையத்தை பாதுகாப்பது போன்ற நடவடிக்கைளில் மொத்தம் 800 அதிகாரிகள் மற்றும் போலீசார் நாளை கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். எனவே, சுங்கை பக்காப்பில் பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்கள் எந்தவிதமான கவலைகளும் பாதுகாப்புக் குழப்பங்களும் இன்றி, அமைதியான சூழ்நிலையிலும் உணர்விலும் நாளை வாக்களிக்கச் செல்லும்படி ஹம்சா வலியுறுத்தினார்.

வாக்காளர்கள் தங்களது அடையாள அட்டையை வெளியில் உள்ள கட்சிகளிடம் ஒப்படைக்க வேண்டாம் என்றுஇன்று பிற்பகல் செபெராங் பிறை செலத்தான் மாவாட்ட போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற ) செய்தியாளர் கூட்டத்தில் அவர் கேட்டுக்கொண்டார். நாளை வாக்களிக்கும் நாள் முழுவதும் தேர்தல் சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என போட்டியிடும் அரசியல் கட்சிகளுக்கு அவர் அறைகூவல் விடுத்தார். சுங்கை பக்காப் இடைத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் டாக்டர் ஜொஹாரி அரிப்பினுக்கும் (Johari Arifin ) பெரிகாத்தான் நேஷனல் வேட்பாளர் அபிடின் இஸ்மாயில் (Abidin Ismail ) லுக்குமிடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!