மாச்சாங், ஜூலை 6 – விரைவு பஸ்சுடன் கார் ஒன்று நேருக்கு நேர் மோதிய விபத்தில் அக்கார் ஓட்டுனரான 88 வயது ஆடவரும் அவரது மனைவியும் மரணம் அடைந்தனர்.
இந்த துயரச் சம்பவம் நேற்று தானா மேரா – மாச்சாங் சாலையில் நிகழ்ந்தது.
விபத்து நிகழ்ந்த இடத்திலேயே அப்துல் ரசாப் அவாங் (Abdul Razab Awang) அவரது 70 வயது மனைவி ஸைத்தோன் இஸ்மாயில் (Zaiton Ismail ) இறந்தனர்.
அந்த இருவரும் தங்களது புரோடுவா கஞ்சில் காரில் தானா மேராவிலிருந்து மாச்சாங்கிற்கு சென்றபோது அந்த காரை ஓட்டிய அப்துல் ரசாப் கட்டுப்பாட்டை இழந்ததால் பஸ் மீது மோதியதாக தொடக்கக் கட்ட விசாரணையில் தெரியவருவதாக மாச்சாங் மாவட்ட போலீஸ் தலைவர் அஹ்மத் ஷபிகி ஹுசின் (Ahmad Shafiki Hussin) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
அந்த விரைவு பஸ்ஸில் இருந்த 29 பயணிகளில் எவரும் காயம் அடையவில்லை.