பெட்டாலிங் ஜெயா, ஜூலை 9 – கடந்த ஜூலை 7ஆம் திகதி LBS-ஆல் கட்டப்பட்ட பண்டார் செளஜானா புத்ரா (Bandar Saujana Putra) மேம்பாலம், அதிகாரப்பூர்வமாகத் திறப்பு விழா கண்டது.
2019ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட இந்த மேம்பாலம் திட்டம், வெற்றிகரமாக சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் பின் ஷாரி (YAB Dato’ Seri Amirudin Bin Shari), திறந்து வைத்தார்.
இந்த மேம்பாலம் வடக்கு – தெற்கு விரைவுச்சாலை மத்திய இணைப்பான ‘Elite’ மற்றும் தெற்கு கிள்ளான் பள்ளத்தாக்கு ‘SKVE’ விரைவுச்சாலைகளுடன் இணைக்கிறது.
ஏறக்குறைய 20,000 சுற்று வட்டார மக்களைக் கொண்டுள்ள அப்பகுதியில், பல சாவல்களை எதிர்நோக்கி கட்டப்பட்ட இம்மேம்பாலம் போக்குவரத்து நெரிசலைக் கணிசமாகக் கட்டுப்படுத்தும் என நம்புவதாக LBSன் நிர்வாக இயக்குநர் டான்ஸ்ரீ லிம் ஹோக் சான் (Tan Sri Lim Hock San) தெரிவித்தார்.
இதனிடையே, சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் தமது உரையில் சிலாங்கூர் மாநில அரசு, அதன் மக்களின் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளித்து வருவதைச் சுட்டிக்காட்டினார்.
இந்த பண்டார் செளஜனா புத்ரா மேம்பாலத்தின் துவக்கமானது, பயண நேரம் மற்றும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதோடு குடியிருப்பாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் என அதன் முக்கியத்துவத்தையும் நோக்கத்தையும் வலியுறுத்தி, LBS-க்கு மெந்தரி பெசார் நன்றி பாராட்டினார்.
இந்நிகழ்ச்சியில், சிலாங்கூர் மாநில பெர்மோடலன் பெர்ஹாட்டின் (Permodalan Negeri Selangor Berhad) தலைமை நிர்வாக அதிகாரி ராஜா அஹ்மத் ஷஹ்ரீர் இஸ்கந்தர் பின் ராஜா சலீம் (Raja Ahmad Shahrir Iskandar Bin Raja Salim) , பொது உள்கட்டமைப்பு மற்றும் வசதிகளுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஷாம் ஹாஷிம் (Izham Hashim), கோலா லங்காட் நகராண்மை கழகத் தலைவர் டத்தோ அமிருல் அசிசான் பின் டத்தோஸ்ரீ அப்த் ரஹீம் (Dato’ Amirul Azizan Bin Dato’ Sri Abd Rahim) ஆகியோர் கலந்து கொண்டனர்.