மிசோரி, ஜூலை 10 – அமெரிக்காவில், உணவு ரைடர் ஒருவர், இரவு நேர ஆர்டரை தவறான வீட்டில் விநியோகம் செய்துள்ளார்.
எனினும், பின்னர் அந்த உணவை திரும்ப பெறச் சென்ற போது, அவர் வயிற்றில் சுடப்பட்டதாக கூறப்படுகிறது.
ஜூலை ஏழாம் தேதி, நள்ளிரவு நேரத்தில், செயின்ட் சார்லஸ் கவுண்டி (St. Charles County) எனுமிடத்தில் அச்சம்பவம் நிகழ்ந்தது.
வீட்டிற்கு வெளியே வைக்கப்பட்டிருந்த உணவை எடுக்க அந்த ரைடர் விரைந்த போது, அவரை வழிமறித்த டிவைன் ஜோன்ஸ் (Dwayne Jones) எனும் ஆடவன் வயிற்றில் சுட்டான்.
அவசர அழைப்பு கிடைத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், பலத்த காயங்களுடன் தரையில் விழுந்து கிடந்த ரைடரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்ற வேளை ; துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட ஆடவன் கைதுச் செய்யப்பட்டான்.
இம்மாதம் 17-ஆம் தேதி அவனுக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்படவுள்ளது.