கோலாலம்பூர், நவ 11 – ம.இ.காவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் நடவடிக்கை குறித்து புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ம.இ.கா உதவித் தலைவர்களும் மத்திய செயலவை உறுப்பினர்களும் இன்று விவாதித்ததாக ம.இ.காவின் உதவித் தலைவரான டத்தோ எம். அசோஜன் தெரிவித்தார்.
ம.இ.காவின் தேசிய தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் மற்றும் துணைத்தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் ஆகியோரின் ஆலோசனைக்கு ஏற்ப இன்றைய சந்திப்பு நிகழ்வு நடைபெற்றதாக ம.இ.கா தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.
இவர்களுடன் இதர உதவித் தலைவர்களான டத்தோ முருகையா , டத்தோ நெல்சன் ஆகியோரும் மற்றும் மத்திய செயலவை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
தொகுதிகளுடன் அணுக்கமான ஒத்துழைப்பை மேற்கொள்ள வேண்டும் என்று இன்றைய கூட்டத்தில் முடிவு காணப்பட்டதாகவும் அந்த அடிப்படையில் எதிர்வரும் ஆகஸ்டு மாதம் முதல் வாரம் அனைத்து தொகுதி தலவர்களுடன் ஒரு கருத்தரங்கை ஏற்பாடு செய்வதற்கு முடிவு செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இதனிடையே அண்மையில் நடைபெற்று முடிந்த ம.இ.கா தேர்தலில் உதவித் தலைவர்களையும் மத்திய செயலவை உறுப்பினர்களையும் தேர்ந்தெடுத்த அனைவருக்கும் அசோஜன் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
அதோடு தேர்தல் முடிவை மறந்துவிட்டு கட்சியன் நலன்களுக்காக தொடர்ந்து அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டார்.