குவந்தான், ஜூலை 13 – பொதுவாகவே குடியிருப்பு பகுதிகளில் பெரிய நிகழ்ச்சிகளின் போது கார் நிறுத்துவதில் சற்று சிரமத்தை எதிர்நோக்குவோம். இவ்வாறான தருணத்தில் மலேசிய ஆடவர் ஒருவர் தன் வீட்டின் முன்னுள்ள வளாகத்தில் இலவசமாக கார் நிறுத்த இடம் தந்தது மட்டுமல்லாமல் வீட்டின் வேலியில் “கார் பார்கிங் வழங்கியதற்கு நன்றிக்கடனாக, தன் மனைவியின் சுமுகமான பிரசவத்திற்குப் பிரார்த்திக்குமாறு” கோரிக்கை குறிப்பு ஒன்றை வைத்துள்ளார்.
இது தொடர்பான வீடியோ ஒன்று நிறைய சமுக வலைத்தளவாசிகளின் மனதை கவர்ந்ததோடு, அவ்வாடவரின் மனைவி சுமூக பிரசவம் காணப் பலரும் வாழ்த்தி கருத்துகளைப் பகிர்ந்துள்ளனர்.