Latestமலேசியா

சாலையின் எதிர்திசையில் வாகனம் ஓட்டிய ஆடவர் கைது

பத்து பஹாட், ஜூலை 14 – பத்து பஹாட்டில் ஜாலான் ஆயர் ஹிதம் – க்லுவாங் (Jalan Air Hitam – Kluang) சாலையில் எதிர் திசையில் அபாயகரமாக கார் ஓட்டியதைத் தொடர்ந்து ஆடவர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

ஜூலை 6 ஆம் தேதி இந்த சம்பவம் நிகழ்ந்ததாக பத்து பஹாட் மாவட்ட இடைக்கால போலீஸ் தலைவர் சுப்ரிடெண்டன் ஷாஹ்ருலானுார் முஷாதத் அப்துல்லா சானி (Superintendent Shahrulanuar Mushaddat Abdullah Sani) தெரிவித்தார்.

அந்த காரை ஓட்டிச் சென்ற 46 வயதுடைய ஆடவர் திடீரென எதிர் திசையில் நுழையும் 30 வினாடிகளைக் கொண்ட காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலானதை போலீசார் கண்டனர்.

டெஸ்போர்ட் கேமராவின் மூலம் அந்த காணொளி பதிவானதை தொடர்ந்து அந்த கார் ஓட்டுனர் மறுநாளன்று மலை மூன்று மணியளவில் பத்து பஹாட் வட்டார போலீஸ் தலைமையகத்தில் கைது செய்யப்பட்டார்.

அந்த வாகன ஓட்டுனர் போதைப் பொருளை பயன்படுத்தியிருக்கிறாரா என்பதை கண்டறிவதற்காக அவரிடம் சிறுநீர் பரிசோதனை நடத்தப்பட்டது.

அந்த நபர் போதைப் பொருள் எதனையும் பயன்படுத்தவில்லை என தெரியவந்தது. அந்த நபர் பயன்படுத்திய காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

1987ஆம் ஆண்டின் சாலை போக்குவரத்து சட்டத்தின் 43 ஆவது விதி உட்பிரிவு (1)இன் கீழ் அந்த நபருக்கு எதிராக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக Sharulanuar தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!