ஜோகூர் பாரு, ஜூலை 16 – ஜோகூர் பாரு, Jalan Skudai Pantai Lido வில் சட்டவிரோத மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டதோடு அபாயகரமான சாகசத்தில் ஈடுபட்ட 17 வயது இளைஞன் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டனர். சாலை முரடர்கள் என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது அவர்கள் கைது செய்யப்பட்டதாக தென் ஜொகூர் பாரு மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் ரவுப் செலமாட் கூறினார்.
நேற்று முன் தினம் மாலை 5 மணி தொடங்கி மறுநாள் அதிகாலை 4 மணிவரை தென் ஜோகூர்பாரு போலீஸ் நிலையத்தின் போக்குவரத்து மற்றும் விசாரணைத்துறை அமலாக்க பிரிவின் அதிகாரிகள் சோதனையை மேற்கொண்டனர்.
சம்பந்தப்பட்ட இடத்தில் வழக்கமாகவே சட்டவிரோத மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபடும் அதிகமான இளைஞர்கள் Wheely , Superman மற்றும் Zig zag சாகசத்தில் ஈடுபட்டுவருவார்கள் என்பதோடு அவர்களது நடவடிக்கை சாலையை பயன்படுத்தும் மற்றவர்களுக்கும் மிரட்டலாக இருந்துவந்ததாக ரவுப் செலமாட் தெரிவித்தார்.
இந்த நடவடிக்கையின்போது 49 மோட்டார் சைக்கிள்களில் பரிசோதனை நடத்தப்பட்டது. 1987 ஆம் ஆண்டின் சாலை போக்குவரத்து சட்டத்தின் கீழ் 34 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டதோடு 54 தனிப்பட்ட நபர்களிடம் பரிசோதனை நடத்தப்பட்டதாக ரவுப் செலமாட் தெரிவித்தார்.