Latestஉலகம்

டிரம்ப் படுகொலை முயற்சி டி-சர்ட்டுகள் ; விரைந்து விற்பனைக்கு கொண்டு வந்து இலாபம் சம்பாதித்த சீன இ-காமர்ஸ் தளங்கள்

சிங்கப்பூர், ஜூலை 16 – அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்புக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட படுகொலை முயற்சியை, சீன இ-காமர்ஸ் சில்லறை விற்பனையாளர்கள் விரைந்து பணமாக்கியுள்ளனர்.

அமெரிக்கா, பென்சில்வேனியாவில், உள்நாட்டு நேரப்படி கடந்த சனிக்கிழமை மாலை மணி 6.11 வாக்கில், டிரம்ப் மீது துப்பாக்கி சூட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

அந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட மூன்று மணி நேரத்தில், சீனாவின் பிரபல இ-காமர்ஸ் தளமான Taobao-வில், டிரம்பின் டி-சர்ட்டுகள் விற்பனைக்கு வந்ததாக சவுத் சீனா மார்னிங் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

டிரம்ப் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட செய்தியை படித்தவுடன், அவரது டி-சர்ட்டுகளை விற்பனைக்கு திறந்த இ-காமர்ஸ் விற்பனையாளர் ஒருவர், மூன்று மணி நேரத்தில், சீனா மற்றும் அமெரிக்க வாடிக்கையாளர்களிடமிருந்து, ஈராயிரத்துக்கும் அதிகமான ஆர்டர்களை பெற்றதாக கூறியுள்ளார்.

அமோக வரவேற்பை பெற்றுள்ள அந்த டி-ஷர்ட்டுகளில் உள்ள புகைப்படம், Associated Press புகைப்பட கலைஞர் இவான் வுசியால் (Evan Vucci) எடுக்கப்பட்டது.

இரத்தம் வழியும் நிலையில், கை முஷ்டியை உயர்த்திக் காட்டும் அந்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களிலும் விரைந்து வைரலானது.

எனினும், வைரலான டிரம்ப் டி-சர்ட்டுகள் பின்னர் தணிக்கை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!