நியூயார்க், ஜூலை 18 – அமெரிக்காவில், இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பெரிய டைனோசர் எலும்புக் கூடு ஒன்று, ஏல சாதனையை பதிவுச் செய்துள்ளது.
கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஏலத்தில் அபெக்ஸ் (Apex) என அழைக்கப்படும் அந்த எலும்புக்கூடு, 44.6 மில்லியன் அமெரிக்க டாலருக்கு விற்பனையாகி, புதிய வரலாறு படைத்துள்ளது.
2020-ஆம் ஆண்டு, தனியார் நிலம் ஒன்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட அபெக்ஸ், 150 ஆண்டுகள் பழைமையானது என மதிப்பிடப்ப்பட்டுள்ளது.
அதோடு, இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட டைனோசர் எலும்புக்கூடுகளில், முழுமையான அல்லது ஏறக்குறைய முழு உருவத்தை கொண்டுள்ள எலும்புக்கூடாகவும் அபெக்ஸ் கருதப்படுகிறது.
11 அடி அல்லது 3.3 மீட்டர் உயரமும், 27 அடி நீளமும் கொண்ட அபெக்சுக்கு மொத்தம் 319 புதைபடிவ எலும்புகள் இருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ள வேளை ; அதில் 254 எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதற்கு முன், 2020-ஆம் ஆண்டு நடைபெற்ற ஏலத்தில், ஸ்டான் (Stan) என அழைக்கப்படும் டைரனோசொரஸ் ரெக்ஸ் (Tyrannosaurus Rex) டைனோசர், 31.8 மில்லியன் டாலருக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டு விற்பனை சாதனையை பதிவுச் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.