Latestமலேசியா

11 வயது சிறுமி கற்பழிப்பு; பதின்ம வயதுடைய நால்வர் கைது

ஈப்போ, ஜூலை 19 – தெலுக் இந்தானுக்கு அருகே  11 வயது சிறுமியை கற்பழித்ததன் தொடர்பில்  பதின்ம வயதுடைய  நால்வர்  கைது செய்யப்பட்டனர்.   

ஜூலை  18 ஆம் தேதி Langkap  போலீஸ்  நிலையத்தில்  இது குறித்து புகார் செய்யப்பட்டுள்ளதாக   ஹிலிர் பேராக் ( Hilir Perak )  .சி.பி.டி துணை கமிஷனர்  அகமட் அட்னான் பஸ்ரி  (Ahmad Adnan Basri ) தெரிவித்திருக்கிறார்.  அந்த  சந்தேகப் பேர்வழிகள் அனைவரும் 14 முதல் 17 வயதுடையவர்களாவர்.  

16 மற்றும் 17 வயதுடைய முதல் மற்றும் மூன்றாவது சந்தேக நபர்கள் பள்ளிப்படிப்பில் இல்லை, அதே சமயம் 14 மற்றும் 17 வயதுடைய இரண்டாவது மற்றும் நான்காவது சந்தேகநபர்கள் இன்னும் பள்ளியில் படித்து வருகின்றனர். 

 அந்த நால்வரும் தெலுக் இந்தானைச் சேர்ந்தவர்கள் என்பதோடு அவர்கள் ஒருவருக்கு ஒருவர்  நன்கு அறிமுகமானவர்கள். முதல்  மற்றும் இரண்டாவது சந்தேகப் பேர்வழிகள்   16 மற்றும் 14 வயதுடையவர்களாவர். அந்த இருவரும்  ஜூலை 17ஆம் தேதி  மாலை மணி  6.30 அளவில் ஒரு காருக்குள் அந்த சிறுமியை கற்பழித்துள்ளனர். 

அந்த இருவருடன் அச்சிறுமி  நீர் வீழ்ச்சிக்கு சென்றபோது  இந்த கொடுமை நிகழ்ந்துள்ளது.  மூன்றாவது   சந்தேகப் பேர்வழியான  17 வயது நபருடன்  அச்சிறுமி வீட்டிற்கு சென்றபோது இரவு  8.30 மணியளவில் கற்பழிக்கப்பட்டதாக  அகமட் அட்னான் தெரிவித்தார்.  17 வயதுடைய நான்காவது சந்தேகப் பேர்வழியும்  ஜூலை 19 ஆம் தேதி அச்சிறுமியுடன்  நள்ளிரவில் வெளியே சென்றபோது  கற்பழித்துள்ளான் என இன்று வெளியிட்ட அறிக்கையில்    அவர் தெரிவித்தார். 

ஜூலை  18 ஆம் தேதி மாலை  3 மணிக்கும் இரவு 10 மணிக்குமிடையே தங்களுக்கு கிடைத்த தகவலைச் தொடர்ந்து  அந்த நான்கு பையன்களையும்  தெலுக் இந்தானில் வெவ்வேறு இடங்களில்   ஹிலிர் பேரா போலீஸ்  தலைமையகத்தின்  குற்றவியல் விசாரணை  பிரிவின் அதிகாரிகள் கைது செய்தனர் என அகமட் அட்னான்  தெரிவித்தார்,

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!