கோலாலம்பூர், ஜூலை 20 – தேசிய முன்னணியிலிருந்து வெளியேறுவது குறித்து கட்சியின் தலைமைத்துவம் விவாதித்துள்ளனதாக வெளியான தகவலை ம.சீ.சவின் தலைமைச் செயலாளர் சொங் சின் வூன் ( Chong Sin Woon ) மறுத்திருக்கிறார்.
இது உண்மையல்ல. கட்சியில் இது தொடர்பாக எதுவும் விவாதிக்கப்படவில்லையென அவர் கூறினார்.
கடந்த 72 ஆண்டுகளுக்கு முன் தேசிய முன்னணியில் இணைந்ததற்கு பிறகு இப்போது ம.சீ.சவின் அடிமட்ட உறுப்பினர்கள் அவ்வளவாக மகிழ்ச்சியாக இல்லையென ம.சீ.ச தலைமைத்துவத்தை மேற்கோள் காட்டி அண்மையில் வெளியான அறிக்கை குறித்து கருத்துரைத்தபோது சொன் சின் வூன் தெரிவித்தார்.
பக்காத்தான ஹராப்பான் ஒதுக்கிய தொகுதிகள் சீராக இல்லாதது , அரசாங்கத்ததில் இடம்பெறாதது மற்றும் வாக்காளர்கள் மத்தியில் தேசிய முன்னணி மீது நம்பிக்கை இழந்தது போன்ற அம்சங்களினால் ம.சீ.ச தொண்டர்கள் அதிருப்த்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
16 ஆவது பொதுத் தேர்தலை எதிர்நோக்குவதற்கு தேசிய முன்னணி தொடர்ந்து பக்காத்தான் ஹராப்பானுடன் தேசிய முன்னணி ஒத்துழைக்கும் என அதன் தலைவர் அகமட் ஸாஹிட் ஹமிடி வெளியிட்ட அறிக்கையை தொடர்ந்து துணிச்சலான நடவடிக்கையை எடுக்கும்படி ம.சீ. ச. தலைமைத்துவத்திற்கு நெருக்குதல் அதிகரித்து வருவதாக அண்மையில் இணையத்தள ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின.