Latestமலேசியா

மலேசியாவில் ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் 5 படங்கள் திரையிடுவதற்கு காத்திருக்கின்றன

கோலாலம்பூர், ஜூலை 20 – அண்மையில் பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடிகர் கமல்ஹசான் நடிப்பில் வெளியான இந்தியன் 2 திரைப்படம் திருப்தி மற்றும் அதிருப்தி என இரு கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

இந்நிலையில், அடுத்து வெளிவரும் சில பெரும் நடிகர்களின் திரைப்படங்களாவது தங்களை மகிழ்வித்துத் திருப்தி படுத்துமா எனும் எதிர்ப்பார்ப்பில் இருக்கின்றனர் ரசிகர்கள்.

அந்த வகையில், அடுத்த மாதம் ஆகஸ்ட்டில் நடிகர் விக்ரம் நடிக்கும் பெரும் எதிர்பார்ப்பை தந்துள்ள ” தங்களான் ” (Thangalaan)  திரைப்படம் வெளியீடு காணவுள்ளது.

அதே மாதத்தில் நடிகர் விஜய் அந்தோனி நடிப்பில் உருவான “மழை பிடிக்காத மனிதன்” (Mazhai Pidikatha Manithan) மற்றும் ஜெயம் ரவி நடிக்கும் “ஜே.ஆர் 30 (JR 30)” ஆகிய திரைப்படங்களும் வெளியீடு காணவிருக்கின்றன.

மேலும் நடிகர் இளைய தளபது விஜய் நடித்துள்ள GOAT, The Greatest Of All Time திரைப்படம் மக்கள் எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கும் திரைப்படமாகும்.

இது செப்டம்பர் வெளியாகிறது என் அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் கார்த்தி நடிப்பில் மெய்யழகன் (Meiyazhagan) திரைப்படமும் செப்டம்பரில் திரையரங்கத்திற்கு வருவதாக கூறப்பட்டுள்ளது.

தமிழர்களுக்கு entertainment அதாவது மகிழ்வூட்டும் பொழுதுபோக்கு என்றால் அதில் திரைப்படங்கள் முக்கிய பங்கு வகிப்பதை மறுக்க முடியாது.

அந்த அடிப்படையில் வெளிவரவுள்ள புதிய திரைப்படங்கள் பற்றிய செய்திகள் மற்றும் தகவல்களில் ஓர் ஈர்ப்பு எப்போதுமே உண்டு.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!