Latestமலேசியா

1,671 போலீஸ் அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் – புக்கிட் அமான் தகவல்

கோலாலம்பூர், ஜூலை 25 – கடந்த பத்தாண்டுகளில், அரச மலேசிய போலீஸ் படையைச் சேர்ந்த மொத்தம் ஆயிரத்து 671 அதிகாரிகளும், உறுப்பினர்களும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

2014-ஆம் ஆண்டு, புக்கிட் அமானின் உயர்நெறி மற்றும் தரநிலை கட்டுப்பாட்டு துறை தோற்றுவிக்கப்பட்டதில் இருந்து, மொத்தம் 40 ஆயிரத்து 436 KST – கட்டொழுங்கு விசாரணை அறிக்கைகளையும், KET – ஒழுங்குமுறை விசாரணை ஆவணங்களையும் அத்துறை பெற்றுள்ளதாக, அதன் இயக்குனர் டத்தோ ஸ்ரீ அஜ்ரி அஹ்மாட் (Datuk Seri Azri Ahmad) தெரிவித்தார்.

அதன் அடிப்படையில், இதுவரை மொத்தம் 15 ஆயிரத்து 546 மூத்த மற்றும் கடைநிலை போலீஸ் அதிகாரிகளுக்கு, பல்வேறு கட்டொழுங்கு தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

அதில், பணிநீக்கம் செய்யப்பட்ட ஆயிரத்து 671 பேரும் அடங்குவார்கள் என்பதை அஜ்ரி சுட்டிக்காட்டினார்.

வெளிப்படையான விசாரணைகள் மற்றும் இது போன்ற தண்டனைகள், அரச மலேசிய போலீஸ் படை உறுப்பினர்களின் தவறான நடத்தைகளை கட்டுப்படுத்த அமல்படுத்தப்படும் அணுகுமுறைகளில் ஒன்றெனவும் அஜ்ரி தெளிவுப்படுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!