Latestமலேசியா

வங்கி வாடிக்கையாளர்கள் கணக்கிலிருந்து 24.2 மில்லியன் ரிங்கிட் பண மீட்பு மோசடி -10 பேர் மீது குற்றச்சாட்டு

கோத்தா கினபாலு, ஜூலை 25 – வங்கியிலிருந்து   சட்டவிரோதமாக  24.2 million ரிங்கிட் பண மீட்பு மோசடியில் ஈடுபட்டதாக   10 பேர் மீது  கோத்தா கினபாலு  செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது. இவர்களில்  இருவர் இந்தியர்கள்  என நீதிமன்றத்தில்  வாசிக்கப்பட்ட பெயர் பட்டியல் மூலம் தெரிவந்துள்ளது.  வங்கியின் கிளையின்  நிர்வாகி  தலைமையில் பரஸ்பர நன்மைக்கான  திட்டமிட்ட  கடுமையான  குற்றச் செயல் கும்பலில் அந்த  10 பேரும் இடம் பெற்றிருந்ததாக   நீதிபதி  அமிர் ஷா அமிர்  ஹசான் 

 ( Amir  Syah Amir Hassan  ) முன்னிலையில்  குற்றஞ்சாட்டப்பட்டது. 

   அவர்கள் அனைவரும்   ஆகஸ்டு   26ஆம் தேதி மற்றும் ஜூலை  10ஆம் தேதிக்கிடையே  கோத்தா கினபாலுவிலுள்ள MBSB  வங்கிக் கிளையில்  இக்குறத்தில்   ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டனர்.  இவர்கள் குற்றவாளி என நிருபிக்கப்பட்டால்  5 ஆண்டுகளுக்கும் குறைவான மற்றும்    20 ஆண்டுகளுக்கும் மேற்போகாத சிறை தண்டனை  விதிக்கப்படும்.    குற்றவியல்   சட்டத்தின் 130 V உட்பிரிவு (1 ன் ) கீழ்   குற்றஞ்சாட்டப்பட்டனர். இவர்களிடமிருந்து வாக்குமூலம்  எதுவும் பதிவு செய்யப்படவில்லை.  அவர்களுக்கு  ஜாமினும் வழங்கப்படவில்லை.  அவர்களை மீண்டும்  செப்டம்பர்  13ஆம் தேதி  நீதிமன்றத்தில் மீண்டும் நிறுத்தப்பட வேண்டும் என  உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!