கோலாலம்பூர், ஜூலை-25 – கோலாலம்பூரை நோக்கிச் செல்லும் கூட்டரசு நெடுஞ்சாலையின் 8.0-வது கிலோ மீட்டரிலிருந்து 8.6-வது கிலோ மீட்டர் வரையிலான சாலை ஜூலை 29 தொடங்கி வரும் டிசம்பர் 31 வரை போக்குவரத்துக்கு மூடப்படும் அல்லது பாதைத் திருப்பி விடப்படும்.
LRT3 இலகு ரயில் சேவை கட்டுமானத் திட்டங்களுக்கு வழிவிடும் வகையில், திங்கள் முதல் ஞாயிறு வரை இரவு 11 மணி தொடக்கம் மறுநாள் அதிகாலை 5 மணி வரை அவ்வாறு செய்யப்படும்.
அக்கட்டுமானக் குத்தகை நிறுவனமான Setia Utama LRT 3 Sdn Bhd அறிக்கையொன்றில் அதனைத் தெரிவித்துள்ளது.
அக்காலம் நெடுகிலும் கோலாலம்பூரை நோக்கிச் செல்லும் வாகனமோட்டிகளின் வசதிக்காக இரு பாதைகள் திறக்கப்பட்டிருக்கும்.
இதனால் ஏற்படும் அசௌகரியங்களுக்கு வருத்தம் தெரிவித்த LRT கட்டுமானக் குத்தகை நிறுவனம், பாதைத் திருப்பி விடப்படுவது தொடர்பான அறிவிப்புப் பலகைகளைப் பின்பற்றி நடக்குமாறு வாகனமோட்டிகளைக் கேட்டுக் கொண்டது.
அது சேவையைத் தொடங்கியதும் 20 லட்சம் பேர் பயனடையவர் என எதிர்பார்க்கப்படுகிறது.