Latestமலேசியா

வட்டி முதலைகளுக்கு உதவிய இருவருக்கு 3,000 ரிங்கிட் அபராதம்

போர்ட் டிக்சன் , ஜூலை 26 – வட்டி முதலைகளுக்கு   வார இறுதியில் அவர்களது    வட்டி தொடர்பான  பதாகைகளை  தொங்க விடுவதில் உதவிய குற்றத்திற்காக  இரு இளைஞர்களுக்கு  தலா  3,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது.  25 வயதுடைய லோகேஸ்வரன் மற்றும்  22 வயதுடைய  ராஜசிங்கம் ஆகிய இருவரும் தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதை  தொடர்ந்து அவர்களுக்கு  இந்த அபராதத் தொகையை  மாஜிஸ்திரேட்   உத்மான்  அப்துல் கனி (Uthman Abd Ghani ) விதித்தார். 

  அபராத தொகையை செலுத்தத் தவறினால் மூன்று மாதம் சிறைத் தண்டனையை அனுபவிக்கும்படி  லோகேஸ்வரன் மற்றும்  ராஜசிங்கத்திற்கு    மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.  இவ்வாண்டு ஜூலை   18 ஆம் தேதி   பிற்பகல் மணி 2.40 அளவில்   போர்ட் டிக்சன் ,  ஜாலான் பசார் பெக்கான் லுக்குட்டில் (Jalan Pasar Pekan Lukut)  இக்குற்றத்தை புரிந்ததாக லோகேஸ்வரன், ராஜசிங்கம்  மீது  குற்றச்சாட்டப்பட்டது.  அவர்கள் இருவரும் தங்களுக்கு விதிக்கப்பட்ட  அபராத தொகையை செலுத்தினர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!