Latestஉலகம்சினிமா

‘புதிய முகமூடி, ஆனால் அதே பணி’ ; ‘அவெஞ்சர்ஸ்’ தொடரில் டாக்டர் டூமாக நடிக்கிறார் ராபர்ட் டவுனி ஜூனியர்

வாஷிங்டன், ஜூலை 29 – ராபர்ட் டவுனி ஜூனியர் (Robert Downey Jr.), மீண்டும் மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸுக்குத் (Marvel Cinematic Universe) திரும்புகிறார்.

எனினும், இம்முறை அவர் மார்வெலின் வீரமிக்க அயர்ன் மேனின் (Iron Man), சிவப்பு மற்றும் தங்க முகமூடியை அணிய மாட்டார்.

மாறாக, மார்வெலின் மிகவும் மோசமான மாய வில்லன்களில் ஒருவரான டாக்டர் டூம் (Doctor Doom) கதாபாத்திரத்தில் அவர் நடிக்கவுள்ளார்.

“புதிய முகமூடி, ஆனால் அதே பணி” என கூறியுள்ள டவுனி, சிக்கலான கதாபாத்திரம் ஏற்று நடிக்க விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, கடந்த சனிக்கிழமை, டவுனி MCU-வுக்கு திரும்புவதாக, மார்வெல் ஸ்டுடியோ அறிவித்திருந்தது.

“அவெஞ்சர்ஸ் : இன்பினிட்டி வார்” (Avengers : Infinity War) மற்றும் “அவெஞ்சர்ஸ் : எண்ட்கேம்” (Avengers : Endgame) ஆகியவற்றின் இயக்குனர்களான ஜோ (Joe) மற்றும் அந்தோனி ருஸ்கோ (Anthony Rusco), அடுத்து இரு சூப்பர் ஹீரோ திரைப்படங்களை இயக்கவுள்ளதாக அறிவித்த சில நிமிடங்களில், டவுனியின் மறுபிரவேசம் மீதான தகவல் வெளியிடப்பட்டது.

அதில், “அவெஞ்சர்ஸ் ; டூம்ஸ்டே” (Avengers :Doomsday) 2026 மே மாதம் மாதமும், “அவெஞ்சர்ஸ் : சீக்ரெட் வார்ஸ்” (Avengers ; Secret Wars) 2027 மே மாதமும் வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!