Latestஉலகம்

ஐக்கிய அரபு சிற்றரசில் முதன் முறையாக லாட்டரி சூதாட்டத்திற்கு உரிமம்

அபு தாபி, ஜூலை-31 – மேற்காசிய நாடான ஐக்கிய அரபு சிற்றரசு (UAE) முதன் முறையாக லாட்டரி சூதாட்ட உரிமத்தை வெளியிட்டுள்ளது.

அந்த லைசென்ஸ் கிடைத்துள்ள The Game LLC எனும் நிறுவனம் UAE Lottery என்ற பெயரில் செயல்படுமென, அந்நாட்டு வணிக விளையாட்டு ஒழுங்குமுறை ஆணையம் கூறியது.

எனினும் அந்த லாட்டரி எப்போது எந்த வடிவில் தொடங்கும் என்பது போன்ற விவரங்களை அவ்வாணையம் தெரிவிக்கவில்லை.

The Game LLC நிறுவனம், வணிக விளையாட்டு (Commercial Gaming), லாட்டரி நடவடிக்கைள் உள்ளிட்டவற்றில் கைத்தேர்ந்த நிறுவனமாகும்.

அந்த இஸ்லாமிய நாட்டில் கேசினோ (casino) மற்றும் இதர சூதாட்டங்களைச் சட்டப்பூர்வமாக்கும் முயற்சிகளின் அடுத்தக் கட்டமாக இது பார்க்கப்படுகிறது.

சூதாட்டத்தை சட்டப்பூரவமாக்குவதன் மூலம், UAE அரசுக்கு சுற்றுலாத் துறை வாயிலாகவும், சீன முதலீட்டு வாயிலாகவும் 6.6 பில்லியன் டாலர் வருமானம் கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!