Latestமலேசியா

PTPTN கல்விக் கடனுதவியை, 300 ரிங்கிட் வரை குறைவாக கட்டமைக்கும் சலுகை ; செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 31 – “உங்கள் கடனுதவியை 300 ரிங்கிட் வரை குறைவாக கட்டமைக்கும் சலுகையை”, PTPTN கல்விக் கடனுதவிக் கழகம், செப்டம்பர் 30-ஆம் தேதி நீட்டித்துள்ளது.

நிலுவையில் உள்ள கடனுதவித் தொகை திரும்ப செலுத்த ஊக்குவிக்க அந்த சிறப்பு சலுகை உருவாக்கப்பட்டதாக, PTPTN தலைவர் நார்லிசா அப்துல் ரஹீம் தெரிவித்தார்.

வழக்கமான கல்விக் கடனுதவி அல்லது உஜ்ரா கடனுதவியை பெற்றவர்களும் அந்த சலுகையை பயன்படுத்திக் கொள்ளலாம்.

கடனுதவியை செலுத்தாமல் நிலுவையில் வைத்திருப்பவர்கள், தங்கள் கடனுதவியை மறுசீரமைக்க 300 ரிங்கிட்டை செலுத்த வேண்டும். அதன் பின்னர் சம்பள பிடித்தம் வாயிலாக அல்லது வங்கி கணக்கு பிடித்தம் வாயிலாக கடனுதவியை திரும்ப செலுத்த அவர்கள் பதிந்து கொள்ள வேண்டும்.

அதே சமயம், தங்களின் நிதி ஆற்றலுக்கு ஏற்ப, மாதம்தோறும் திரும்ப செலுத்தும் தொகையையும் அவர்கள் நிர்ணயம் செய்துக் கொள்ள முடியும்.

அதனால், தங்கள் PTPTN கல்விக் கடனுதவியை மறுசீரமைத்துக் கொள்ள விருப்பம் உள்ளவர்கள், செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள், அருகிலுள்ள அதன் அலுவலகங்களை அணுகலாம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!