Latestமலேசியா

விபத்துல் கை நசுக்கப்பட்ட சரண்யாவுக்கு RM7.1 மில்லியன் இழப்பீடு; காப்புறுதி நிறுவனத்திற்கு உத்தரவு

கிள்ளான், ஆக 1 – 10 ஆண்டுகளுக்கு முன் லோரியினால் கை நசுக்கப்பட்ட பெண்ணுக்கு 7 .1 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு வழங்கும்படி மோட்டார் சைக்கிள் நிறுவனத்தின் காப்புறுதி நிறுவனத்திற்கு எதிரான வழக்கில் செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டது. பாதிக்கப்பட்ட சரண்யாவுக்கு ( Saranya ) எலக்ட்ரானிக் ஆர்த்தோடிக் (electronic orthotic) கையை வாங்குவதற்கும், அவ்வப்போது மாற்றுவதற்கும், பராமரிப்பதற்கும் 6.9 மில்லியன் ரிங்கிட்டும் , மேலும் அவர் அனுபவித்த வலி மற்றும் துன்பத்திற்காக 215,000 ரிங்கிட் வழங்கும்படி நீதிபதி ஷரிபா ஜைனால் அபிடின் ( Zarifah Zainal Abidin ) தீர்ப்பளித்தார்.

பிராச்சியல் பிளெக்ஸஸ் ( brachial Plexuas ) என்ற காயத்தினால் சரண்யா பாதிக்கப்பட்டுள்ளதால் அவரது இடது கையை பயன்படுத்த முடியவில்லை. விபத்திற்குப் பிறகு, இரண்டு கைகளையும் பயன்படுத்த வேண்டிய எளிய கடமைகளை செய்ய முடியாமல், அன்றாடத் தேவைகளுக்காகக்கூட தனது தாயார் நாக சித்ரவையே ( Naga Chittra ) சரண்யா நம்பியிருக்க வேண்டியுள்ளது.

கடந்த 2014ஆம் ஆண்டு ஆகஸ்டு 5 ஆம் தேதியன்று அப்போது 12 வயதாக இருந்த சரண்யா பள்ளி முடிந்து தனது தந்தை மகேந்திரன் (Mahendran) ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்தபோது கிள்ளான், காப்பார், Persiaran Hamzah Alangகில் மற்றொரு மோட்டார் சைக்கிளில் மோதியதால் விபத்துக்குள்ளானார். அந்த விபத்தில் மோட்டார் சைக்கிளோட்டி Shazrin Hasan மரணம் அடைந்ததோடு சாலையிலிருந்து தூக்கி எறியப்பட்ட Mahendran னும் சரண்யாவும் லோரி செல்லும் பாதையில் விழுந்தனர். லோரியினால் நசுக்கப்பட்டதால் அந்த விபத்தில் மகேந்திரன் உயிரிழந்ததோடு சரண்யா தலையில் காயத்திற்கு உள்ளாகி அவரது கையும் நசிந்தது. தனது தாயாரின் மூலம் சரண்யா லோரி ஓட்டுனர் மற்றும் Shazrin மோட்டர் சைக்கிள் காப்புறுதி நிறுவனத்திற்கு எதிராக 2018 ஆம் ஆண்டு வழக்குத் தொடுத்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!