கோலாலம்பூர், ஆக 5 – அண்மையில் கோயில் நிகழ்ச்சி ஒன்றில் பெண் பாடகிகளின் நிகழ்ச்சிக்கு விதிக்கப்பட்ட தடையை திரெங்கானு ஆட்சிக்குழு உறுப்பினர் வான் சுகைரி வான் அப்துல்லா ( Wan Sukairi Wan Abdullah ) தற்காத்துக் பேசியுள்ளார்.
தடை விதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியான போதிலும் இதர சமய நிகழ்ச்சிக்கு எதிராக பாகுபாடு காட்டப்படுவதாக கூறப்படுவதை திரெங்கானு அரசாங்கம் மறுத்துள்ளது. திறந்த வெளியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பெண் பாடகிகள் பாடுவதற்கு தடுக்கப்பட்டதால் Guan Di கோயில் நிர்வாகத்திற்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக வான் சுகைய்ரி தெரிவித்தார்.
அந்த கோயில் விழா திறந்த வெளியில் நடைபெற்றதால் பெண் பாடகிகள் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு தடை விதிக்கப்பட்டதாகவும் பொழுதுபோக்கிற்கான மாநில அரசாங்கத்தின் வழிகாட்டுதல்கள் மீறப்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.
அந்த ஆலயத்தின் கொண்டாட்டதை முன்னிட்டு பெர்மிட்டுக்காக அந்த ஆலய நிர்வாகம் கோலாத்திரெங்கானு மாநகர் மன்றத்திடம் ஜூன் 20 ஆர்தேதி மனு சமர்ப்பித்தது.
பெண் கலைஞர்கள் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியை பெண்கள் மட்டுமே பார்க்க முடியும் என்பது கலைநிகழ்ச்சி சம்பந்தப்பட்ட வழிகாட்டுதலில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த நிகழ்ச்சி கோவில் வளாகத்தில் உள்ள கூடாரத்தின் கீழ் நடத்தப்பட்டு, வழிப்போக்கர்கள் பார்வைக்கு திறக்கப்படும் என்பதால், இது ஆண் மற்றும் பெண் பார்வையாளர்களை கவரும் மற்றும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு பிரத்தியேகமாக இருக்காது என்று Wan Sukairi நேற்று தனது முகநூல் பதிவில் வெளியிட்டிருந்தார்.
அந்த கோயில் நிகழ்ச்சியில் பெண் பாடகர்கள் பாடுவதை ஏன் திரெங்கானு அரசாங்கம் தடை செய்தது என கடந்த சனிக்கிழமை DAP உதவித் தலைவர் திரேசா கோக் (Teresa Kok ) கேள்வி எழுப்பியிருந்தார்.