Latestமலேசியா

பிரதமரின் இன்ஸ்டாகிராம், முகநூல் பதிவுகளை நீக்கியதற்காக மெட்டா மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்

புத்ராஜெயா, ஆகஸ்ட் 5 – மறைந்த ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே குறித்து பிரதமர் அன்வார் இப்ராஹிம் வெளியிட்ட சமூக வலைத்தளப் பதிவுகளை நீக்கியதற்காக இன்ஸ்டாகிராம், முகநூலின் தாய் நிறுவனமான மெட்டா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அரசாங்கம் வலியுறுத்தியிருக்கிறது.

இன்று தகவல் தொடர்பு அமைச்சர் பாமி பாட்ஷில், மலேசியத் தகவல் தொடர்பு பல்லூடக ஆணையத்தின் தலைவர் டான் ஸ்ரீ முகமட் சலீம் ஃபதே தின் (Tan Sri Mohamad Salim Fateh Din) ஆகிய இருவரும் மெட்டாவின் பிரதிநிதிகளைச் சந்தித்த போது இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக பிரதமர் மரணமடைந்த ஹனியேவிற்கு எழுதிய இரங்கள் பதிவு மெட்டாவால் அகற்றப்பட்டது, பாரபட்சம், நியாயமற்ற தன்மை மற்றும் கருத்துச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது.

அதுமட்டுமல்லாமல், அடிப்படை மனித உரிமைகளுக்கான பாலஸ்தீனியர்களின் போராட்டத்தை அவமதிக்கும் வகையில் அது இருந்ததாகவும் பாமி சுட்டிக்காட்டினார்.

இதனிடையே, நேற்று நடைபெற்ற பேரணியின் நேரடி ஒளிபரப்பை முகநூலில் தடை செய்ததை குறித்து மெட்டா தனது வருத்தத்தை வெளிப்படுத்தியிருந்தது.

இது குறித்து விரைவில் அறிக்கை வாயிலாக மெட்டா பதில்களை வெளியிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!