Latestமலேசியா

தண்டவாளத்தில் அத்துமீறி பிரச்னையைத் தேடிக் கொள்ளாதீர் – KTMB எச்சரிக்கை

கோத்தா பாரு, ஆகஸ்ட்-6 – ரயில் தண்டவாளங்களில் அத்துமீறுவோருடன் சமரசம் செய்துக் கொள்ளப்படாது என KTMB நிறுவனம் எச்சரித்துள்ளது.

அத்துமீறுவோருக்கு 500 ரிங்கிட் அபராதம் விதிக்கப்படுமென்றும் அது நினைவுறுத்தியது.

2010 தரை பொது போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் அனைத்து ரயில் தண்டவாளப் பகுதிகளும் பொது மக்களுக்கு தடைச் செய்யப்பட்ட பகுதிகளாகுமென, KTMB தலைமை செயலதிகாரி மொஹமட் சாய்ன் மாட் தஹா (Mohd Zain Mat Taha) தெரிவித்தார்.

தண்டவாளப் பகுதிகளில் அத்துமீறுவது மிகவும் ஆபத்தானதாகும்;

எனவே, புகைப்படம் அல்லது வீடியோ எடுப்பதற்காகவே என்றாலும் கூட, யாரும் தண்டவாளங்களுக்குள் அத்துமீற வேண்டாம் என அவர் அறிவுறுத்தினார்.

பாதுகாப்பு எங்களுக்கு முக்கியம்; இனியும் அப்படி அத்துமீறாதீர் என்றார் அவர்.

விரைவில் திருமணம் செய்துகொள்ளவிருக்கும் ஒரு ஜோடி, கிளந்தான், தானா மேராவில் உள்ள கில்மார்ட் (Guillemard) பாலத்தில் புகைப்படம் எடுத்துக் கொண்ட வீடியோ ஞாயிறு முதல் வைரலானது.

26 வினாடி அவ்வீடியோவில், horn அடித்துக் கொண்டே ரயில் வந்துக் கொண்டிருக்க, ஒரு புகைப்படக்காரர் தண்டவாளத்தில் ஓடி வருவதும், அந்த வருங்கால தம்பதி ஆடி அசைந்து மெதுவாக நகருவதும் கண்டு நெட்டிசன்கள் கொதித்து போனது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!