கோலாலம்பூர், ஆக 8 – பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் தேசிய ஒன்றையர் பேட்மிண்டன் விளையாட்டாளர் லீ ஷியா ஜியாவை அரையிறுதி ஆட்டத்தில் வீழ்த்திய தாய்லாந்து ஆட்டக்காரர் Kunlavut Vitidsarnனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சரான ஹன்னா இயோ தற்காத்துப் பேசியுள்ளார். சிறந்த விளையாட்டு உணர்வுவோடு அந்த புகைப்படம் எடுத்துக்கொண்டதாக தமது முகநூலில்அவர் பதிவிட்டுள்ளார்.
பதக்கத்தை வெல்வது மட்டுமே நோக்கம் இல்லை. மாறாக நமது இளைய தலைமுறையினரிடையே ஆரோக்கியமான விளையாட்டு கலச்சாரத்தை ஊக்குவிக்கும் நோக்கத்திலேயே தாய்லாந்து விளையாட்டளருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டேன். நாம் தோல்வியற்றவர்கள் அல்ல. இதனால் நமது எதிரணி போட்டியாளர்களின் பலத்தை அங்கீகரிப்பதாக உணர்ச்சிவசப்பட வேண்டியதில்லை என அவர் தெரிவித்தார்.
ஒலிம்பிக் விளையாட்டு என்பது திறன், மரியாதை மற்றும் நட்பு ஆகிய பண்புகளை மதிக்க வேண்டும் என்பதோடு விளையாடுத் திறன் என்பது தோல்வியை ஏற்றுக்கொள்வது மற்றும் போட்டியாளர்களின் வெற்றியை மரியாதையுடன் ஒப்புக்கொள்வதாகும் என ஹன்னா இயோ சுட்டிக்காட்டினார்.
இளைஞர்கள் நல்லதை பாராட்டுவதற்கு தைரியமாக இருக்க வேண்டும், அதோடு வாழ்க்கையின் விலைமதிப்பற்ற பாடங்களை கற்பிக்கும் விளையாட்டுகளில் பங்கேற்க பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை ஊக்குவிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். சிறந்த விளையாட்டுணர்வை கொண்டிருந்தால் அவர்கள் மேலும் வலுவடைவார்கள் என்றும் ஹன்னா இயோ தெரிவித்தார்.