மூவார், ஆகஸ்ட்-8- அட்டைப் பெட்டி தயாரிக்கும் இயந்திரத்தில் சிக்கி நேப்பாள தொழிலாளியின் கால் நசுங்கியது.
ஜோகூர், மூவாரில் பாரிட் ஜாவா தொழிற்பேட்டை அருகே இன்று அதிகாலை 1 மணியளவில் அச்சம்பவம் நிகழ்ந்தது.
அட்டைப் பெட்டி தயாரிக்கப் பயன்படுத்தப்படும் காகிதம், ஓடிக் கொண்டிருந்த troller இயந்திரத்தினுள் சிக்கியதால், அதனை அவர் அகற்ற முயன்ற போது, அவரின் கணுக்கால் அதில் சிக்கிக் கொண்டது.
அவரின் முதலாளி விரைந்து செயல்பட்டு இயந்திரத்தை நிறுத்திய நிலையில் அங்கு விரைந்த
தீயணைப்பு வீரர்கள் சிறப்புக் கருவிகளைக் கொண்டு அந்த இயந்திரத்தின் இரும்பை வெட்டி, அத்தொழிலாளியின் காலை வெளியே எடுத்தனர்.
சிகிச்சைக்காக அவர் உடனடியாக மூவார் சுல்தானா ஃபாத்திமா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
எனினும், படுமோசமாக நசுங்கியதால், 32 வயதான அந்நபரின் இடது கணுக்காலை வேறு வழியின்றி மருத்துவர்கள் அகற்ற வேண்டியதாயிற்று.