Latestஉலகம்

ஈபிள் டவர் மீது ஏறிய மர்ம நபர்: பாரிஸ் போலீஸ் மடக்கிப் பிடித்தனர்

பாரிஸ், ஆகஸ்ட் 12 – பாரிஸ் ஒலிம்பிக்கின் நிறைவு விழாவிற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, ஆடவர் ஒருவர் ஈபிள் கோபுரத்தின் மீது ஏறிய திடுக்கிடும் சம்பவம் நடந்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் பரவிய காணொளிகளில், அந்த நபர் 330 மீட்டர் உயரமுள்ள கோபுரத்தை எந்த பாதுகாப்பு உபகரணமும் இன்றி ஏறிக் கொண்டிருந்தது தெரியவந்துள்ளது.

சட்டை இல்லாமல் அந்த ஆடவர் ஈபிள் கோபுரத்தை ஏறிக்கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்களை, உடனடியாக அப்பகுதியை விட்டு வெளியேற்றினர்.

குறிப்பிட்ட உயரத்தை அடைந்த பிறகு அந்த ஆடவரை போலிசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

பாரிஸ் பப்ளிக் பிராசிகியூட்டர் (Paris Public Prosecutor’s Office) அலுவலகம், பிடிப்பட்ட அந்த ஆடவர் பிரிட்டிஷ் என்பதை உறுதிப்படுத்தியது.

மற்றவர்களுக்கு ஆபத்து மற்றும் வரலாற்று, கலாச்சார தளங்களில் அத்துமீறி நுழைந்ததாக குற்றம் சாட்டப்பட்டு, அந்த ஆடவர் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த சம்பவத்தால் பதற்றம் ஏற்பாட்டாலும், பாரிஸ் ஒலிம்பிக் போட்டியின் நிறைவு விழா திட்டமிட்டபடி நடைபெற்றது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!