சென்னை, ஆகஸ்ட்-14 – விஜய் தொலைக்காட்சியின் பிரபல பிக் பாஸ் நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அது குறித்து விரைவிலேயே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் அச்செய்தி எந்தளவுக்கு உண்மையென தெரியவில்லை.
முன்னதாக நடிகை ரம்யா கிருஷ்ணன், நடிகர்கள் அர்ஜூன், சரத்குமார், அர்விந்தசாமி, சிம்பு உள்ளிட்டோரின் பெயர்களும் அடிபட்டன.
ரம்யா கிருஷ்ணனும் சிம்புவும் ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியிருப்பதால், அவர்களுக்கு கூடுதல் வாய்ப்பிருப்பதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில் விஜய் சேதுபதியின் பெயர் அடிபட தொடங்கியுள்ளது.
ஏற்கனவே ஒப்புக் கொண்ட படங்களை முடித்துக் கொடுக்க வேண்டியிருப்பதால், பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து கனத்த இதயத்துடன் விலகுவதாக நடிகர் கமல்ஹாசன் அண்மையில் அறிவித்திருந்தார்.
இதையடுத்து வரும் 8-வது சீசனில் யார் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவார் என்ற எதிர்பார்ப்பு பிக் பாஸ் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.