Latestமலேசியா

நெடுஞ்சாலையில் ஐந்து வாகன விபத்து; ஒருவர் மரணம் – 5 கிலோ மீட்டர் வரை வாகன நெரிசல்

கோப்பேங், ஆகஸ்ட் 15 – வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையில், இன்று காலை ஐந்து வாகனங்கள் விபத்துக்குள்ளான சம்பவத்தில், ஓட்டுநர் ஒருவர் பலியானார்.

மூன்று டிரெய்லர்கள், ஒரு டன் லோரி மற்றும் MPV ராக Toyota Velfire வாகனங்கள் உள்ளடக்கிய இந்த சம்பவத்தால், தாப்பாவிலிருந்து கோப்பேங் செல்லும் நெடுஞ்சாலையில் ஐந்து கிலோ மீட்டர் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இந்த கோர விபத்தில், 30 வயது டிரெய்லர் ஓட்டுநர் ஒருவர் இருக்கையில் சிக்கி உயிரழந்தார்.

மற்ற வாகனங்களிலிருந்தவர்கள் காயங்களுடன் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக பேராக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டுப் பிரிவு உதவி இயக்குநர் சபரோட்சி நோர் அகமட் (Sabarodzi Nor Ahmad) கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!