ஜோகூர் பாரு, ஆகஸ்ட் 15 – சமீபத்தில் X தளத்தில் வைரலான காணொளியில், பெண் ஒருவர் வாகனத்தைச் சேதப்படுத்தும் சம்பவத்தைத் தொடர்ந்து, போலீசார் விசாரணையை முடக்கியுள்ளனர்.
வைரலான பத்து வினாடி காணொளியில், அந்த பெண் காரில் ஏறி வாகனத்தின் பின்பக்க கண்ணாடியை உடைப்பதற்கு முன், காரின் பக்கவாட்டு கண்ணாடியை உடைக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன.
இதனிடையே, கடந்த ஆகஸ்ட் 5 ஆம் திகதி, இந்த சம்பவம் குறித்து ஆடவர் ஒருவர் புகார் அளித்துள்ளதை ஜோகூர் பாரு வடக்கு மாவட்ட காவல்துறைத் தலைவர் பல்வீர் சிங் மகிந்தர் சிங்க் (Balveer Singh Mahindar Singh) உறுதிப்படுத்தினார்.
குற்றவியல் சட்டம் 427ஆவது பிரிவின் கீழ் இந்த சம்பவம் விசாரிக்கப்படுகிறது என்றார், அவர்.