Latest

சட்டவிரோத ஒளிபரப்பு; ஆஸ்ட்ரோவுக்கு RM200,000 கொடுக்க ஒப்புக் கொண்ட நாசி கண்டார் உணவகம்

புக்கிட் ஜாலில், ஆகஸ்ட்-19 – துணைக்கோள ஒளிபரப்பு நிறுவனமான ஆஸ்ட்ரோவின் (Astro Malaysia Holdings Berhad) துணை நிறுவனமான மியாசாட்டுக்கு (Measar Broadcast System Sdn Bhd) 221,773 ரிங்கிட்டை இழப்பீடாக வழங்க பிரபல நாசி கண்டார் நிறுவனமான தக்வா (Thaqwa) ஒப்புக் கொண்டுள்ளது.

சந்தா விதிமுறைகளை மீறி, தனது சில கிளை உணவகங்களில் ஆஸ்ட்ரோ தொலைக்காட்சி ஒளிபரப்பை சட்டவிரோதமாக மேற்கொண்டதற்காக, அத்தொகையை வழங்கி பிரச்னையைத் தீர்த்துக் கொள்ள அது இணங்கியுள்ளது.

ஒப்புக் கொண்ட சந்தாவின் படி, தனது 2 உணவகங்களில் மட்டுமே ஆஸ்ட்ரோ ஒளிபரப்பை மேற்கொள்ள அதற்கு அனுமதியுண்டு.

ஆனால், ஆஸ்ட்ரோவின் டிக்கோடர் (decoder), விவேக அட்டை போன்றவற்றைப் பயன்படுத்தி மேலும் 8 உணவகங்களில் சட்டவிரோதமாக ஆஸ்ட்ரோ ஒளிபரப்பை அந்த நாசி கண்டார் உணவகம் மேற்கொண்டு வந்துள்ளது.

ஆஸ்ட்ரோவின் விளம்பர மற்றும் விற்பனை பிரிவுத் தலைவர் Tai Kam Leong இன்று வெளியிட்ட அறிக்கையில் அதனைத் தெரிவித்தார்.

மேற்கண்ட இழப்பீட்டுத் தொகையோடு, ஆஸ்ட்ரோவின் அறிவு சார் சொத்து மற்றும் காப்புரிமையை மதிக்கும் வகையில், இனி சந்தா விதிமுறையை மதித்து நடப்பதாகவும் Taqwa உறுதியளித்துள்ளதாக அவர் சொன்னார்.

டிஜிட்டல் கள்ளப்பதிப்பை முறியடிக்கும் முயற்சியில் சட்ட நடவடிக்கை எடுப்பதன் வாயிலாக, படைப்பாளர்களுக்கும் கலைஞர்களுக்கும் நியாயம் கிடைப்பதை ஆஸ்ட்ரோ உதவுவதாக Kam Leong தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!