Latestஉலகம்

டெலிகிராம் செயலியின் நிறுவனர் பாவெல் துரோவ் பிரான்சில் அதிரடியாகக் கைது

பாரீஸ், ஆகஸ்ட் 25 – முதன்மைச் சமூக ஊடகங்களில் ஒன்றாக மாறியுள்ள டெலிகிராம் (telegram) செயலியின் நிறுவனரும் தலைமைச் செயலதிகாரியுமான பாவெல் துரோவ் (Pavel Durov) பிரான்ஸ் நாட்டில் கைதாகியுள்ளார்.

டெலிகிராமில் பரவலாக நடைபெறும் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தத் தவறியதாகக் கூறி பதிவான வழக்கில், 39 வயது துரோவ் கைதுச் செய்யப்பட்டார்.

தனி ஜெட் விமானத்தில் பயணமான துரோவ், பாரீஸுக்கு வெளியே பொர்காட் (Bourget) விமான நிலையத்தில் வைத்து கைதானார்.

பணமோசடி, போதைப்பொருள் கடத்தல், ஆபாசப் பதிவுகளின் பகிர்வு என பல்வேறு குற்றச்செயல்கள் நடைபெறுவதற்கு டெலிகிராம் செயலி வசதியானத் தளமாகியிருப்பதால், பிரான்ஸ் அரசு துரோவுக்கு எதிராக கைது ஆணை பிறப்பித்திருந்தது.

குற்றச்செயல்களைத் தடுப்பதில் டெலிகிராம் மெத்தனம் காட்டுவதாக, நமது தொடர்புத் துறை அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் (Fahmi Fadzil) கூட சாடியிருந்ததது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அந்த ரஷ்ய கோடீஸ்வரர் இன்று பின்னேரம் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவாரென எதிர்பார்க்கப்படுகிறது.

2013-ஆம் ஆண்டு டெலிகிராமை நிறுவிய துரோவ், அடுத்தாண்டே ரஷ்யாவை விட்டு வெளியேறினார்.

அவரின் தற்போதையச் சொத்து மதிப்பு 15.5 பில்லியன் டாலர் என மதிப்பிடப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!