கோலாலம்பூர், ஆகஸ்ட் -27- கோலாலம்பூர் தாமான் மெலாத்தியில் Inap Desa உல்லாச தங்கும் விடுதியில் திருடன் புகுந்ததில், விற்பனை முகவரான ஒரு பெண்ணுக்கு 5,500 ரிங்கிட் இழப்பு ஏற்பட்டது.
வெள்ளிக்கிழமை இரவு நிகழ்ந்த அச்சம்பவத்தில், வரவேற்பறையில் வைத்திருந்த தனது கைப்பை காணாமல் போனது கண்டு 49 வயது அப்பெண் அதிர்ச்சியடைந்தார்.
CCTV கேமரா பதிவைப் போட்டுப் பார்த்ததில், வீட்டுக்குள் ஒரு மர்ம நபர் சந்தேகத்திற்குரிய வகையில் நுழைவது தெரிந்தது.
இதையடுத்து அவர் போலீசில் புகார் செய்தார்.
விசாரணையைத் தொடங்கியுள்ள போலீஸ், திருடனையும் தேடி வருகிறது.