கிரீஸ், ஆகஸ்ட் 29 – மத்திய கிரீஸின், வோலோஸ் (Volos) கடற்கரையில் கோடிக்கணக்கில் மீன்கள் இறந்து கரை ஒதுங்கின.
இதனால், கடற்கரை முழுவதும் துர்நாற்றம் வீசத் துவங்கியுள்ள நிலையில், அப்பகுதி மக்களும் அதிகாரிகளும் இணைந்து, நேற்று அதிகாலை இறந்த மீன்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
ஏறக்குறைய 40 டன்களுக்கு மேல் இறந்த மீன்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
இருப்பினும், பல உணவகங்கள் இந்த இறந்து அழுகிய மீன்களின் துர்நாற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
அருவருப்பான காட்சியால் சுற்றுலாப் பயணிகளும் அங்கு வருகையளிப்பதை நிறுத்தி வருகின்றனர்.
கடந்த ஆண்டு வரலாறு காணாத வெள்ளம் வடக்கே தெசலியை (Thessaly) மூழ்கடித்த காரணமாகக், கடலில் மீன்கள் இறந்து கரை ஒதுங்குவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
வோலோஸுக்கு (Volos) செல்லும் ஆற்றின் முகப்பில் வலை வைக்கப்படாமல் இருப்பதால், அதன் உப்பு நீர் மீன்களை அழித்ததாக கூறுகின்றனர்.