Latestமலேசியா

அடிக்கடி திட்டு வாங்கியதில் விரக்தியடைந்த வெளிநாட்டு ஆடவன்; ஆத்திரத்தில் வீட்டில் உள்ளவர்களைக் கத்தியால் தாக்கிய சம்பவம்

கோலாலம்பூர், ஆகஸ்ட் 29 – பாண்டன் இண்டாவில் (Pandan Indah) உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து, ஆடவன் ஒருவன் வீட்டில் உள்ளவர்களைக் கத்தி மற்றும் மரக்கட்டைகளைக் கொண்டு தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று மதியம் 31 வயதுடைய அந்த வெளிநாட்டு ஆடவன் பழங்களை வெட்டிக் கொண்டிருந்த போது, 18 மற்றும் 28 வயதுடைய தனது சக வீட்டு நண்பர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளான்.

அப்போது வாக்குவாதம் கைகலப்பாக மாற, அந்த ஆடவன் கத்தி மற்றும் கட்டைகளைக் கொண்டு அவர்களைத் தாக்கினான்.

அதனைத் தொடர்ந்து, அந்த வெளிநாட்டு ஆடவன் வீட்டில் வைத்தே கைது செய்யப்பட்டதாக, அம்பாங் ஜெயா மாவட்ட துணைத்தலைவர் சுப்ரிடெண்டன் நஸ்ருல் எக்ரம் அபு சாரே (Superintendent Nazruel Ekram Abu Saare) தெரிவித்தார்.

முதற்கட்ட விசாரணையில், அந்த வெளிநாட்டு ஆடவன் அடிக்கடி வீட்டில் உள்ளவர்களால் திட்டப்பட்டு வந்ததாகவும், குடும்ப பிரச்சனைகள் தொடர்பாகத் தொடர்ந்து சண்டைகளை எதிர்நோக்கி வந்ததும் தெரியவந்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!