கோலாலம்பூர், செப்டம்பர்-6 – மெர்டேக்கா சென்டர் நடத்திய 2024 தேசிய இளைஞர் ஆய்வு முடிவுகள், மலேசிய இனங்களுக்கிடையிலான உறவுகள் குறித்து அதி முக்கிய உண்மைகளை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளன.
குறிப்பாக, காலங்காலமாக இந்தியர்கள் சந்திக்கும் பாகுபாடுகளும், மலாய்க்காரர்கள் தங்களுக்கிடையிலேயே கொண்டுள்ள அவநம்பிக்கையும் அதில் தோலுரிக்கப்பட்டுள்ளன.
மலேசியச் சமூகத்தில் தாங்கள் தொடந்து ஒதுக்கப்படுவதாக, ஆய்வில் பங்கேற்ற பெரும்பாலான இந்தியர்கள் கூறியிருக்கின்றனர்.
நியாயமற்ற முறையில் நடத்தப்படுவதாகவும், தங்களிடம் பாகுபாடு காட்டப்படுவதாகவும் 62 விழுக்காட்டு இந்தியர்கள் குறைப்பட்டுக் கொண்டனர்.
மற்ற சமூகங்களுக்கு ஈடாக நடத்தப்படுவதாக 28 விழுக்காட்டினர் மட்டுமே தெரிவித்துள்ளனர்.
இனங்களுக்குள்ளேயே இருக்கும் நம்பிக்கையைப் பார்த்தால், சீனர்கள் முதலித்தில் உள்ளனர்.
சீனர்கள், சீனர்கள் மேல் கொண்டுள்ள நம்பிக்கை 95 விழுக்காட்டில் உள்ளது.
இந்தியர்கள், சக இந்தியர்கள் மீது கொண்டுள்ள நம்பிக்கையின் அளவு 85 விழுக்காடாக உள்ள நிலையில், மலாய்க்காரர்களில் 75 விழுக்காட்டினர் மட்டுமே சக மலாய்க்காரர்கள் மீது நம்பிக்கைக் கொண்டுள்ளனர்.
இன்னொரு முக்கிய மற்றும் கவலைக்குரிய விஷயமாக, மற்ற இனங்கள் மீது மலாய்க்கார்கள் குறைந்த அளவிலேயே நம்பிக்கைக் கொண்டிருப்பது கண்டறியப்பட்டது.
மலாய்க்காரர்களில் 57 விழுக்காட்டினர் சீனர்களை நம்புவதில்லை; 53 விழுக்காட்டினர் இந்தியர்கள் மீது அவநம்பிக்கைக் கொண்டிருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.