நீலாய், செப்டம்பர்-28, சிரம்பான், நீலாயில் சாலை சமிக்ஞை விளக்குப் பகுதியில் நின்றிருந்த 5 வாகனங்களை மணல் லாரி மோதியதில், ஒரு பெண் கொல்லப்பட்டார்.
நேற்று மதியம் நிகழ்ந்த அவ்விபத்தில் மேலும் நால்வர் காயமுற்றனர்.
செப்பாங்கிலிருந்து நீலாய் செல்லும் வழியில் கட்டுப்பாட்டை இழந்து லாரி, தடம்புரண்டு 5 வாகனங்களை மோதியது தொடக்கக் கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது.
இதனால் Perodua Atvia காரிலிருந்த 31 வயது பெண், தலையிலும் உடம்பிலும் படுகாயமேற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
Perodua Alza காரிலிருந்த நால்வருக்கு சிராய்ப்புக் காயங்கள் ஏற்பட்டன.
மணல் லாரி ஓட்டுநரும், பாதிக்கப்பட்ட மேலும் நால்வரும் காயமின்றி தப்பியதாக நீலாய் போலீஸ் கூறியது