Latestமலேசியா

வெளிநாட்டுக் கணவர் – மலேசியத் தாய்: இவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு இயல்பாகவே குடியுரிமை; அரசியலமைப்புச் சட்டம் திருத்தம்

கோலாலம்பூர், அக் 17 – வெளிநாட்டு  கணவர்களைக் கொண்ட மலேசிய தாய்மார்களுக்கு பிறக்கும்   குழந்தைகளுக்கு இயல்பாகவே  குடியுரிமை வழங்கும் சட்டத்தை இறுதியில் இன்று நாடாளுமன்றம் நிறைவேற்றியது. 

குடியுரிமை  தொடர்பான  கூட்டரசு  அரசியலமைப்பு  சட்டத் திருத்தம் மக்களவையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு அதிகமாக   ஏகமனதாக  நிறைவேற்றப்பட்டது. மொத்தம் உள்ள   222 எம்.பிக்களில்   குறைந்த பட்சம்  148 உறுப்பினர்களின்  ஆதரவு இந்த  சட்டத்திருத்தம் நிறைவேற்றுவதற்கு தேவையாகும்.  

எனினும்  206  நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த  சட்டத்திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். ஒருவர் இந்த சட்டத்திற்கு எதிராக வாக்களித்த வேளையில் இதர  14 நாடாளுமன்ற உறுப்பினர்கள்  வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.  ஒருவர் அவையில் இருந்து ஏற்கனவே நீக்கப்பட்டுள்ளார்.

 அரசியலமைப்பு திருத்தங்கள் தொடர்பாக  கூட்டரசு அரசியலமைப்பு  சட்டத்தின்  159 வது பிரிவின்படி புளோக்  (bloc vote) வாக்கெடுப்பு தேவை என்று  வாக்கெடுப்புக்கு முன்னதாக     ஜொஹாரி அப்துல்  கூறியிருந்தார். அதோடு நாடாளுமன்ற உறுப்பினர்கள்  அவைக்கு வருவதற்கு  கூடுதலாக  மூன்று  நிமிடம் வழங்கப்பட்டு  இரண்டு நிமிடங்களுக்குள் அவர்கள் வருவதற்காக மணியை அடிக்கும்படியும் அவர் உத்தரவிட்டார். 

குடியுரிமை சட்டங்கள் தொடர்பாக பல திருத்தங்களை கொண்ட மசோதா இதற்கு முன் பல முறை  ஒத்திவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!