
கோலாலம்பூர், அக் 21 – வெளிநாட்டு தொழிலாளர்களின் ஒதுக்ககிடு முடக்கத்தை அரசாங்கம் தொடரும் என உள்துறை அமைச்சர் சைபுடின் நசுட்டின் இஸ்மாயில் தெரிவித்தார். அரசாங்கம் நிர்ணயித்துள்ள வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான நிர்ணயிக்கப்பட்ட வரம்பு எண்ணிக்கை செப்டம்பர் 15ஆம்தேதிவரை நெருங்கியுள்ளதாக இன்று வெளியிட்ட அறிக்கையொன்றில் அவர் குறிப்பிட்டார். வெளிநாட்டு தொழிலாளர்களை வேலைக்கு
அமர்த்துவதற்கான ஒதுக்கீட்டு விண்ணப்பங்கள் முடக்கம் மறு அறிவிப்பு வரும் வரை தொடரும் என்றும் அவர் கூறினார்
நாட்டின் மொத்த பணியாளர்களில் 15 விழுக்காடு வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கையை பொருளாதார அமைச்சு நிர்ணயித்துள்ளது. வெளிநாட்டு தொழிலாளர்களக்கான புதிய மறுசீரமைப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தும் திட்டம் அரசாங்கத்திடம் இல்லை. இதற்கு முந்தைய மறுசீரமைப்பு திட்டம் கடநத் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதியோடு முடிவடைந்துவிட்டதாக சைபுடின் விவரித்தார். நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கை , தேசிய பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கு பின்பற்றப்படுவதை உறுதி செய்வதற்காக வெளிநாட்டு தொழிலாளர்களின் நுழைவை உள்துறை அமைச்சு தொடர்ந்து கண்காணித்து வருகிறது என்றும் கைபுடின் தெரிவித்துள்ளார். மார்ச் 2023 முதல் அமலில் இருக்கும் வெளிநாட்டு தொழிலாளர்களை வேலைக்கு சேர்ப்பதற்கான முடக்கத்தின் இரண்டாவது நீட்டிப்பு இதுவாகும்.