
சுபாங் ஜெயா, டிசம்பர்-2 – சிலாங்கூர், சுபாங் ஜெயாவில் 24 மணி நேர பல்பொருள் விற்பனைக் கடையிலிருந்து, வெள்ளிக்கிழமை மதியம் நாசி லெமாக், சன்விட்ச் ரொட்டி, 241 ரிங்கிட் ரொக்கம் ஆகியவற்றை இருவர் திருடிக்கொண்டு ஓடினர்.
எனினும், 23, 24 வயதிலான இரு சந்தேக நபர்களும் ஒரே நாளில் பிடிபட்டதாக, சுபாங் ஜெயா மாவட்ட போஸீஸ் தலைவர் துணை ஆணையர் வான் அஸ்லான் வான் மாமாட் (Wan Azlan Wan Mamat) தெரிவித்தார்.
சம்பவத்தின் போது கடைக்குள் நுழைந்த இருவரில் ஒருவன், கல்லாப்பெட்டியில் இருந்த பணம் அனைத்தையும் தரச் சொல்லி 29 வயது பணியாளரை மிரட்டியுள்ளான்.
பணியாளர் தனது சொந்த ஆவணங்கள், கடை சாவி, மோட்டார் சைக்கிள் சாவி உள்ளிட்டவற்றை வைத்திருந்த தோளில் மட்டும் பையையும் திருடர்கள் விட்டு வைக்கவில்லை.
கூடவே இரு நாசி லெமாக் பொட்டலங்களையும் 2 சன்விச் ரொட்டி பைகளையும் எடுத்துக் கொண்டு ஓடினர்.
இந்நிலையில் சுபாங் ஜெயாவிலுள்ள ஒரு வீட்டில் இருவரையும் கைதுச் செய்த போலீஸ், மொத்தம் 260 ரிங்கிட் மதிப்பிலான திருடுபோன பொருட்களையும் பறிமுதல் செய்தது.
ஏற்கனவே போதைப்பொருள் மற்றும் குற்றச்செயல் தொடர்பில் குற்றப்பதிவுகளைக் கொண்ட இருவரும் விசாரணைக்காக 4 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.