கோத்தா கினாபாலு, டிசம்பர்-19 – சபா, கோத்தா கினாபாலுவில் போதைப் பொருள் மயக்கத்தில் ஒன்றாக ஆட்டம் போட்ட 3 பதின்ம வயதுப் பெண்கள் உள்ளிட்ட 9 பேர் கைதாகியுள்ளனர்.
அவர்கள் வாடகைக்கு இருந்த அடுக்குமாடி வீட்டை கடந்த வாரம் போலீஸ் முற்றுகையிட்ட போது, அது வெளிச்சத்துக்கு வந்தது.
20 வயதிலான அவர்கள் அனைவரும், ஷாபு உட்பட 4 வகையான போதைப் பொருளை உட்கொண்டிருந்தது சிறுநீர் பரிசோதனையில் உறுதிபடுத்தப்பட்டது.
அந்த 3 பெண்களுக்கும் 6 ஆடவர்களுக்கும் அண்மையில் தான் அறிமுகம் ஏற்பட்டிருக்கிறது.
அதற்குள் போதைப் பொருள் மயக்கத்தில் வீட்டில் ஆட்டம் போடும் அளவுக்கு அவர்கள் நெருக்கமாகி விட்டது விசாரணையில் தெரிய வந்தது.
அபாயகர போதைப் பொருள் சட்டத்தின் கீழ் அவர்கள் மீதான விசாரணைத் தொடருவதாக கோத்தா கினாபாலு போலீஸ் தலைவர் துணை ஆணையர் காசிம் மூடா (Kasim Muda) தெரிவித்தார்.