Latestமலேசியா

வெள்ளத்தின் போது பாசீர் மாசில் வழித்தவறி வந்த 2 மீட்டர் நீள முதலை

பாசீர் மாஸ், ஜனவரி-2, கிளந்தானில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது வழித்தவறி வந்ததாக நம்பப்படும் 2 மீட்டர் நீள முதலை, பாசீர் மாஸ், Kampung Tal Tujuh, Lorong Masjid ஆற்று பள்ளத்தில் சிக்கிக் கொண்டது.

எனினும், படத்தோடு அச்செய்தி வைரலானதை அடுத்து நேற்று காலை சம்பவ இடம் விரைந்த பாசீர் மாஸ் தீயணைப்பு-மீட்புத் துறையின் கண்களுக்கு முதலை தென்படவில்லை.

அப்பகுதியில் விரிவாக சோதனையிட்டும் முதலையைக் காணவில்லை; ஒருவேளை அது தப்பிச் சென்றிருக்கலாம் என பாசீர் மாஸ் தீயணைப்பு-மீட்புத் துறையின் தலைவர் Mas Mohd Azmi Hussin கூறினார்.

இவ்விவகாரம் தற்போது வனவிலங்குப் பாதுகாப்பு மற்றும் தேசியப் பூங்காக்கள் துறையான PERHILITAN-னின் கவனத்துக்குக் கொண்டுச் செல்லப்பட்டுள்ளது.

முதலை பிடிபடும் வரை கிராம மக்கள் எச்சரிக்கையோடும் கவனமாகவும் இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!