Latestமலேசியா

தைப்பூசம் : பத்து மலையை நோக்கிச் செல்லும் 7 சாலைகள் மூடப்படும்

கோலாலம்பூர், பிப்ரவரி-7 – தைப்பூசத்தை ஒட்டி வரும் ஞாயிறு இரவு தொடங்கி பிப்ரவரி 14 வரை பத்து மலையைச் சுற்றியுள்ள 7 சாலைகள் கட்டங்கட்டமாக போக்குவரத்துக்கு மூடப்படும்.

பெரும் கூட்டம் திரளும் என எதிர்பார்க்கப்படுவதால், சுமூகமானப் போக்குவரத்தை உறுதிச் செய்ய அச்சாலைகளை மூட வேண்டியுள்ளதாக, சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ ஹுசேய்ன் ஓமார் கான் கூறினார்.

Kampung Melayu Batu Caves சாலை சமிக்ஞை சந்திப்பு; பத்து மலை அருகேயுள்ள MRR2 turnoff; பத்து மலையை நோக்கிச் செல்லும் Jalan Perusahaan;
Sri Gombak-கிலிருந்து Susur Perusahaan நோக்கிச் செல்லும் MRR2 turnoff உள்ளிட்டவை சம்பந்தப்பட்ட சாலைகளாகும்.

Jalan Seri Batu Caves 8/Jalan Batu Caves Lama சாலை சந்திப்பு; Sri Batu Caves சாலை சமிக்ஞை விளக்குப் பகுதி; Batu Caves bypass தொடங்கி பத்து மலை முதன்மை நுழைவாயில் நோக்கிச் செல்லும் ஆகியவை, பாதிக்கப்படும் எஞ்சிய சாலைகளாகும்.

சாலைகள் மூடப்படுவது தொடர்பான அறிவிப்புகள், வாகனமோட்டிகளின் வசதிக்காக பத்து மலை roundabout-டில் உள்ள மின்னியல் அறிவிப்புப் பலகைகளில் இடம் பெறும்.

கோம்பாக் போலீஸ் தலைமையகத்தின் அதிகாரப்பூர்வ facebook பக்கத்திலும் அத்தகவல்கள் இடம் பெறும் என டத்தோ ஹுசேய்ன் சொன்னார்.

இவ்வாண்டு பத்து மலை தைப்பூசம் நெடுகிலும் பொது அமைதியை நிலைநாட்டும் நோக்கில், 1,306 போலீஸ்காரர்கள் பணியில் ஈடுபடுவர் என்றும் அவர் சொன்னார்.

பத்து மலைக்கு சொந்த வாகனங்களில் வருவோர், ஒதுக்கப்பட்ட இடங்களில் வாகனங்களை நிறுத்த வேண்டும்; அதோடு அவை முறையாகப் பூட்டப்படுவதையும் அவர்கள் உறுதிச் செய்ய வேண்டும்.

கோயில் வளாகத்தில் ட்ரோன்களை பறக்க விடவும் அனுமதியில்லை; அப்படி பறக்க விட விரும்புவோர், முதலில் மலேசிய பொது விமானப் போக்குவரத்து அதிகாரத் தரப்பிடம் அனுமதி வாங்க வேண்டும் என டத்தோ ஹுசேய்ன் நினைவுறுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!