![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2025/02/Screenshot-2025-02-07-at-11.42.05-AM.png)
பிரயாக்ராஜ், பிப்ரவரி-7 – இந்தியா உத்தர பிரதேசம், பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளா, 4 கின்னஸ் உலகச் சாதனைகளுக்குக் குறி வைத்துள்ளது.
முதல் முயற்சியாக வரும் பிப்ரவரி 14 அன்று 15,000 துப்புரவுப் பணியாளர்கள் ஒன்றிணைந்து, பக்தர்கள் புனித நீராடும் இடங்களை சுத்தம் செய்வார்கள்.
முந்தையச் சாதனையாக, 2019-ல் 10,000 துப்புரவுப் பணியாளர்கள் அதில் ஈடுபட்டனர்.
இரண்டாவது உலக சாதனை முயற்சியாக, பிப்ரவரி 15-ல், 300க்கும் மேற்பட்டோர், சங்கத்தில் உள்ள நீரோடையை சுத்தப்படுத்தவுள்ளனர்.
மறுநாள் பிப்ரவரி 16-ஆம் தேதி, அணிவகுப்பு மைதானத்தில் 1,000 மின்னியல் ரிக்ஷாக்களை ஒரே நேரத்தில் இயக்கி புதிய உலக சாதனை படைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
கடைசியாக பிப்ரவரி 17-ல் கங்கை பந்தலில் 8 மணி நேரங்களில் 10,000 பேர் கையால் அச்சடித்து உலக சாதனை படைப்பார்கள்.
நடப்பில், 8 மணி நேரங்களில் கைரேகை ஓவியம் வரைந்த உலக சாதனையை பிரயாக்ராஜ் மேளா ஆணையம் வைத்துள்ளது;
2019 கும்பமேளாவின் போது 7,664 நபர்கள் கைரேகை ஓவியம் வரைந்து அச்சாதனையை ஏற்படுத்தினர்.
இச்சாதனை முயற்சிகள் கின்னஸ் புத்தகம் மற்றும் உலகச் சாதனை குழுவால் கண்காணிக்கப்பட்டு அங்கீகரிக்கப்படும்.
இதற்காக கின்னஸ் உலகச் சாதனை அதிகாரத் தரப்பு விரைவில் பிரயாக்ராஜ் வருகிறது.