ஜோகூர் பாரு, பிப் 7 – இவ்வருட தைப்பூசத்தன்று மாசாய் ஶ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தில் பிரார்த்தனைகள் மற்றும் நேர்த்திக் கடன்களை நிறைவேற்ற வரும் பக்தர்கள் மாசாய் முருகனின் திருத்தலம் தூய்மையாக இருப்பதை உறுதி செய்ய சுற்றுவட்டார மக்களின் நற்சேவையை ஆலய நிர்வாகம் நாடியுள்ளதாக அந்த ஆலயத்தின் தலைவர் சுப்ரமணியம் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தைப்பூசத்திருநாளில் பத்துமலை, பினாங்கு, ஈப்போ, சுங்கை பட்டாணி ஆகிய இடங்களில் இருக்கும் முருகன் ஆலயங்களின் தூய்மையைப் பாதுகாத்து வரும் “CLEAN THAIPUSAM” – தூய்மையான தைப்பூசம் எனும் கருப்பொருளில் தூய்மையைப் பேணி வரும் குழுவினர் இவ்வருடம் மாசாய் சுப்பிரமணியர் ஆலயத்தின் அழைப்பினை ஏற்று முதல் முறையாக மாசாய் ஶ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்திற்குத் தங்கள் சேவையை வழங்கவிருக்கின்றனர்.
இந்த நடவடிக்கைக்கு தன்னார்வாலர்கள் முன்வரும்படி அவர் அழைப்பு விடுத்துள்ளார். கீழே கொடுக்கப்பட்டிருக்கும் இணைப்பில் பெயர்களைப் பதிந்து தைப்பூசத்திருவிழாவின்போது மாசாய் சுப்பிரமணியர் ஆலயத்தின் தூய்மையைக் காக்க உதவும்படி சுப்பிரமணியம் கிருஷ்ணன் அறைகூவல் விடுத்தார்.